‘அச்சு அசலா சம்மு மாறியே இருக்கீங்களே பவித்ரா’ – போட்டோவை பார்த்து அசந்து போன ரசிகர்கள்!!

0

“குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலமாக பிரபலம் அடைந்த நடிகை பவித்ரா லட்சுமி தற்போது நடிகை சமந்தாவை போலவே உள்ள ஒரு புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் இன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை பவித்ரா லட்சுமி

மக்கள் மத்தியில் தற்போது மிகவும் பிரபலமாக இருப்பவர் தான் நடிகை, பவித்ரா லட்சுமி. இவர் ஒரு டான்சர் மற்றும் நடிகை ஆவார். இவர் மாடலிங் துறையில் இருந்து நடிப்பு துறைக்கு வந்தவர் ஆவார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” நிகழ்ச்சியில் இவர் பங்கு பெற்று மூன்றாவது பரிசினை வென்றவர் ஆவார். அது மட்டும் அல்லாமல் இவர் பல மாடலிங் போட்டிகளில் பங்கு பெற்று வெற்றியும் பெற்றுள்ளாராம்.

டாஸ்மாக் கடைகளை எதிர்க்க மக்களுக்கு உரிமை உண்டு – உயர்நீதிமன்றம் அதிரடி!!

இப்படியாக இருக்க, இவர் ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றது “3 ஷேட்ஸ் ஆப் லவ்” என்ற குறும்படத்தின் மூலமாக தான். அதில் நடிகர் அஷ்வினுக்கு ஜோடியாக நடித்திருப்பார். அதிலும் குறிப்பாக, இவர் அந்த குறும்படத்தில் கூறும் “ஹலோ, சீனியர் அப்பா அம்மா இல்ல, நல்ல பாதுப்பிங்களா” என்ற டயலாக் தான். இதன் மூலம் இவர் பிரபலம் ஆனாலும், இவருக்கு என்று தனி அங்கீகாரம் கிடைக்கவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த சமயத்தில் தான் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “குக் வித் கோமாளி 2” நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. தனது எதார்த்தமான நடவடிக்கைகளால் மக்கள் மத்தியில் இவர் மிகவும் பிரபலம். இப்படியாக இருக்க, இவர் தற்போது “தெறி” திரைப்படத்தில் வரும் சமந்தாவை போல மேக் அப் போட்டு எடுத்து கொண்ட ஒரு புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த புகைப்படத்தினை பார்த்த சமந்தா பவித்ரா அழகாக இருப்பதாக கமெண்ட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here