டாஸ்மாக் கடைகளை எதிர்க்க மக்களுக்கு உரிமை உண்டு – உயர்நீதிமன்றம் அதிரடி!!

0

டாஸ்மாக் கடைகளை அரசு திறந்து வைத்தாலும், டாஸ்மாக் கடைகள் மூலமாக பாதிக்கப்படும் மக்கள் அதற்கு தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்கலாம் என்று சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.

டாஸ்மாக் கடைகள்

தமிழகத்தில் அரசின் கீழ் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இந்த டாஸ்மாக் கடைகள் அரசு உடைமையாக்கப்பட்டது. இப்படியாக இருக்க இந்த டாஸ்மாக் கடைகள் மூலமாக பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது பரவலாக பள்ளிகள், மக்கள் அதிகம் பயன்படுத்தும் இடம் ஆகியவற்றில் டாஸ்மாக் கடைகள் அமைக்கப்படுகின்றன.

கொரோனா பரவல் அதிகரித்தால் பகுதி நேர ஊரடங்கு – ஆளுநர் எச்சரிக்கை!!

இதன் காரணமாக பெண்கள், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் என்று பலர் பாதிக்கப்படுகின்றனர். இதே போன்று தான் சேலம் மாவட்டம் கருமலைக்கூடல் என்ற பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதி மக்கள் அதிகம் பயன்படுத்தும் இடம் ஆகும். இதனால் பெண்கள் உட்பட பலர் அந்த கடையினை அகற்ற கோரி தொடர் போராட்டம் நடத்தி வந்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் அந்த பகுதியினை சேர்ந்த போலீசார் பெண்கள் உட்பட பலர் மீது வன்முறையினை தூண்டி விட்டதாக கூறி வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுத்துள்ளார். இதனை விசாரித்த நீதிபதிகள் “டாஸ்மாக் கடைகள் அரசு கீழ் செயல்பட்டாலும், அந்த கடைகள் மூலமாக பாதிக்கப்படுவார்கள் தங்களது எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தாராளமாக தெரிவிக்கலாம். அவர்களுக்கு அதற்கான உரிமையும் உள்ளது” இவ்வாறாக தெரிவித்துள்ளனர். அதே போல் வழக்கினை ரத்து செய்தும் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here