நடிகர் விஷாலால் முட்டுக்கட்டையாக நிற்கும் லத்தி திரைப்படம்!!

0

இயக்குனர் வினோத்குமார் படைப்பில் உருவான லத்தி திரைப்படத்தில் நடித்துள்ளார் நடிகர் விஷால். தற்போது இப்படத்தின் முழு ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் தியேட்டரில் விருந்துக்காக காத்துக்கொண்டிருக்கிறது. மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்தப் படம் தயாராகியுள்ளது. நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா தயாரிக்கும் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் அனைவரும் நடிகர் விஷால் மீது குற்ற சாட்டை வைத்து வருகிறார்கள்.

அதாவது அவர் நடிக்கும் எல்லா படங்களிலும் ஷூட்டிங் வர மறுக்கிறாராம். இதனால் தயாரிப்பாளர் நஷ்டம் அடைந்து வருகிறார். இதற்கு நியாயம் கேட்டு சென்ற தயாரிப்பாளர்களிடம், எனக்கு என் நண்பன் உதயநிதி இருக்கிறான் என்று மிரட்டுகிறாராம். இதனால் அவரிடம் பேசுவதற்கு தயாரிப்பளார்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து நண்பர்கள் தயாரிப்பில் நடித்த லத்தி திரைப்படமும் இந்த நிலைமையில் தான் இருக்கிறது.

இப்படம் செப் 15 மாதம் ரிலீஸ் ஆவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது வரை படத்தை வெளியிடுவதற்கு நடிகர் விஷால் எந்த முயற்சியும் எடுக்காமல் இருக்கிறாராம். இதை அவரிடம் கேட்க முடியாமல் பட தயாரிப்பாளர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இருப்பினும் இந்த படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here