லோகேஷ் – விஜய் கூட்டணியில் சேர்ந்த முக்கிய பிரபலம்.., வெளியான சுட சுட அப்டேட்!!

0
லோகேஷ் - விஜய் கூட்டணியில் சேர்ந்த முக்கிய பிரபலம்.., வெளியான சுட சுட அப்டேட்!!
லோகேஷ் - விஜய் கூட்டணியில் சேர்ந்த முக்கிய பிரபலம்.., வெளியான சுட சுட அப்டேட்!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் தளபதி 67 படத்தை குறித்து லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

தளபதி 67:

சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகர் விஜய். தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய் பாடிய “ரஞ்சிதமே ரஞ்சிதமே” பாடல் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

பிக் பாஸ் சீசன் 6.., ஹவுஸ் மேட்ஸ் போடும் பயங்கர திட்டம்.., அசிமை பகடையை பயன்படுத்தும் சோகம்!!

இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து விஜய்யை வைத்து மாஸ்டர் படம் இயக்கிய லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். தற்போது இப்படத்தின் முதல் கட்ட பணிகள் படு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படத்தில் 5 வில்லன்கள் என்று இணையத்தில் கூறி வந்த நிலையில், இந்த கூட்டணியில் நடிகர் விஷாலும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தளபதி 67 படத்திற்கு காஸ்டியூம் டிசைனர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கைதி, பேட்ட போன்ற வெற்றி படங்களில் காஸ்டியூம் டிசைனராக பணிபுரிந்த பிரவீன் என்பவர் கமிட்டாகியுள்ளார் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் ஆரம்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here