தமிழகத்தில் TNPSC, TRB வேலைவாய்ப்பு.,, முக்கிய அரசாணை வெளியீடு!!

0
தமிழகத்தில் TNPSC, TRB வேலைவாய்ப்பு.,, முக்கிய அரசாணை வெளியீடு!!
தமிழகத்தில் TNPSC, TRB வேலைவாய்ப்பு.,, முக்கிய அரசாணை வெளியீடு!!

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் வாயிலாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் காலிபணியிடங்களும் நிரப்பபட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் அண்மையில் நடத்தப்பட்ட குரூப் 2, குரூப் 4 தேர்வு முடிவுகளுக்காக தேர்வர்கள் ஆர்வமாக காத்து கொண்டு உள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழக மின்வாரியம் அதிரடி – மின் கட்டணம் ரூபாய் 3600 ஐ தாண்டும் அபாயம்! பயனர்கள் அதிர்ச்சி!!

அதில் அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகள் செயல்படுத்திட உரிய சட்டத்தை இயற்றுவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக நிர்வாக சட்ட நிபுணர்களையும், மூத்த வழக்கறிஞர்களையும் கொண்ட சட்ட வல்லுநர் குழு ஒன்றை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் மாநில அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி, என் ஆர் இளங்கோ, அருள்மொழி, லட்சுமி நாராயணன் ஆகிய வழக்கறிஞர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குழு TNPSC, TN-TRB ஆகியவை வாயிலாக நிரப்பப்படும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை முழுமையாக பின்பற்றும் என தகவல்கள் கூறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here