தமிழக மின்வாரியம் அதிரடி – மின் கட்டணம் ரூபாய் 3600 ஐ தாண்டும் அபாயம்! பயனர்கள் அதிர்ச்சி!!

0
தமிழக மின்வாரியம் அதிரடி - மின் கட்டணம் ரூபாய் 3600 ஐ தாண்டும் அபாயம்! பயனர்கள் அதிர்ச்சி!!
தமிழக மின்வாரியம் அதிரடி - மின் கட்டணம் ரூபாய் 3600 ஐ தாண்டும் அபாயம்! பயனர்கள் அதிர்ச்சி!!

தமிழகத்தில், மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட புதிய கட்டண விதிமுறைகளின் படி பொது சேவை மின் இணைப்புக்கான கட்டணம் 400 யூனிட்டிற்கு 3600 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பயனர்கள் ஷாக் :

தமிழகத்தில் மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் மூலம், பயனர்களுக்கான மின் கணக்கீடு செய்யப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில், புதிய மின் கட்டணங்களை இந்த ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டது. தொடர்ந்து 100 யூனிட் இலவச மின்சாரம், தற்போது வரை வழங்கப்பட்டு வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில் இதற்கு முன்பு வரை வீடுகளில் பொது சேவை, அதாவது மோட்டார் பம்ப், லிப்ட் போன்றவைகளுக்கு வசூலிக்கப்படும் மின்கட்டணம் வீட்டு உபயோக பிரிவிலேயே வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது அதனை மாற்றி, பொது சேவைக்கான கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 8 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. அந்த வகையில் தற்போது அடுக்குமாடி குடியிருப்பு, அலுவலக பிரிவினர், தனிப்பட்ட வீடுகள் ஆகியவற்றுக்கான பொது சேவை மின்கட்டணத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சந்திர கிரகணம்.., கோவில் செல்லும் பக்தர்களே இதை பார்த்துட்டு போங்க!!

புதிதாக உயர்த்தப்பட்ட கட்டணத்தின் படி, 400 யூனிட்டுக்கு ரூபாய் 3600 மின் கட்டணம் கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் இதே அளவில், ரூ.1000 க்கும் கீழ் மின் கட்டணம் கட்டி வந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், பொது சேவை பிரிவுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை பாதியாக குறைக்க வேண்டும் என, சம்பந்தப்பட்ட பயனர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here