ரசிகர் மன்ற பொதுச்செயலாளர் கல்யாணத்திற்கு மனைவியுடன் சென்ற மக்கள் செல்வன் – வைரலாகும் புகைப்படங்கள்!!

0
ரசிகர் மன்ற பொதுச்செயலாளர் கல்யாணத்திற்கு மனைவியுடன் சென்ற மக்கள் செல்வன் - வைரலாகும் புகைப்படங்கள்!!
ரசிகர் மன்ற பொதுச்செயலாளர் கல்யாணத்திற்கு மனைவியுடன் சென்ற மக்கள் செல்வன் - வைரலாகும் புகைப்படங்கள்!!

நடிகர் விஜய் சேதுபதி முன்னிலையில், அவரது ரசிகர் மன்ற பொதுச்செயலாளருக்கு சுயமரியாதை திருமணம் நடந்த நிலையில் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகப் பரவி வருகிறது.

நடிகர் விஜய் சேதுபதி:

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் சைடு ரோலில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களுக்கு டப் கொடுத்து வருபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாமனிதன் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், அதிக அவார்டை வாரி குவித்து வருகிறது. தற்போது ஜவான் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தின் பொதுச் செயலாளர் பொறுப்பு வகித்து வரும் J குமரன் என்பவருக்கு , சாதி மதம் கடந்து சுயமரியாதை திருமணம் இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு விஜய் சேதுபதியும் அவரின் மனைவி ஜெசி விஜய் சேதுபதி தலைமை வகித்து திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர்.

இந்திய அணிக்கு சவால் விடும் ஒரே வீரர் இவர் தான்…, பவுலர்கள் சமாளிப்பார்களா?

மேலும் ஜாதி மற்றும் மதங்களை மறந்து இரு வீட்டார் சம்மதத்துடன் சுற்றம் சூழ, நண்பர்கள் கொண்ட இந்த கல்யாணத்தை முடித்த தம்பதியரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மனைவி ஜெசியும் ஆசீர்வதித்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here