இந்திய அணிக்கு சவால் விடும் ஒரே வீரர் இவர் தான்…, பவுலர்கள் சமாளிப்பார்களா?

0
இந்திய அணிக்கு சவால் விடும் ஒரே வீரர் இவர் தான்..., பவுலர்கள் சமாளிப்பார்களா?
இந்திய அணிக்கு சவால் விடும் ஒரே வீரர் இவர் தான்..., பவுலர்கள் சமாளிப்பார்களா?

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியில் இந்திய அணிக்கு பெரும் சவாலாக இந்த ஒரு வீரர் இருப்பர் என கூறப்பட்டு வருகிறது.

IND vs AUS:

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி, பார்டர் கவாஸ்கர் டிராபியில் விளையாட இருக்கிறது. 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட இந்த டிராபியின் முதல் போட்டி வரும் 9ம் தேதி நாக்பூரில் நடைபெற உள்ளது. வருடம் தோறும் நடைபெறும் இந்த டிராபியில், இந்திய அணியை கடந்த 3 ஆண்டாக டிராபியை வென்றுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஆஸ்திரேலிய அணியானது முன்கூட்டியே இந்தியாவுக்கு வந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தியாவை பொறுத்த வரையில், அதனை சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது கடினமான ஒன்று என்பதே ஆஸ்திரேலிய வீரர்களும் அறிவர். இதை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பெரிய சவாலை எதிர்கொள்ள தயாராகி வருகிறோம் என்று கூறியுள்ளார்.

T20 உலக கோப்பை போட்டியில் ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பில்லை.., முன்னாள் வீரர் ஓபன் டாக்!!!

இந்திய அணி எவ்வளவு தான் தனது சொந்த மண்ணில் பலமாக இருந்தாலும், ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித்தை வீழ்த்துவது சற்று கடினமான ஒன்று தான். அதாவது, இந்திய அணிக்கு எதிராக இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள இவர், 1742 ரன்களை குவித்து உள்ளார். தற்போதும் சிறந்த பார்மில் இருக்கும் இவரது விக்கெட்டை இந்திய வீரர்கள் விரைவில் எடுக்கும் பட்சத்தில், ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் உயர்வதை கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here