திடீரென விஜய்யின் “LEO” படத்தின் ஷூட்டிங் நிறுத்தம்…,இணையத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
திடீரென விஜய்யின்
திடீரென விஜய்யின் "LEO" படத்தின் ஷூட்டிங் நிறுத்தம்...,இணையத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

நடிகர் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் ஷூட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது.

லியோ திரைப்படம்:

கமல் நடித்த விக்ரம் படம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய்யை வைத்து லியோ என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார். இப்படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். குறிப்பாக சஞ்சய் தத், மிஷ்கின், கெளதம் மேனன், அர்ஜுன் போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் வீடியோ, போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ஹைப்பை ஏற்படுத்தியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படி பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் லியோ படத்தின் ஷூட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது. அதாவது தளபதி விஜய் நடிக்கும் LEO படத்தின் ஷூட்டிங் எடுக்கும் பகுதியில் அளவுகடந்த குளிர் அடிப்பதால் படக்குழுவினர் படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கைமீறிப் போன வாய்ப்பு.., மீண்டும் வந்து சேர்ந்த அதிர்ஷ்டம்.., உருக்கமான வார்த்தைகளை கொட்டி பதிவு போட்ட சின்னத்திரை பிரபலம்!!

மேலும் இதற்கு முன்னர் ஒரு தடவை இதே காரணத்தால் ஷூட்டிங்கை நிறுத்திய போது படக்குழுவினர் 70 நாட்களில் காஷ்மீர் ஷூட்டிங்கை முடிப்போம் என்று கூறியிருந்தனர். தற்போது 50 நாட்களிலே பேக்அப் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி படம் வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்த நிலையில், காஷ்மீரில் ஷூட்டிங் எடுப்பது படக்குழுவினருக்கு சவாலாக இருந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here