கைமீறிப் போன வாய்ப்பு.., மீண்டும் வந்து சேர்ந்த அதிர்ஷ்டம்.., உருக்கமான வார்த்தைகளை கொட்டி பதிவு போட்ட சின்னத்திரை பிரபலம்!!

0
கைமீறிப் போன வாய்ப்பு.., மீண்டும் வந்து சேர்ந்த அதிர்ஷ்டம்.., உருக்கமான வார்த்தைகளை கொட்டி பதிவு போட்ட சின்னத்திரை பிரபலம்!!
கைமீறிப் போன வாய்ப்பு.., மீண்டும் வந்து சேர்ந்த அதிர்ஷ்டம்.., உருக்கமான வார்த்தைகளை கொட்டி பதிவு போட்ட சின்னத்திரை பிரபலம்!!

விஜய் டிவியின் ரசிகர் மத்தில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் கண்ணன் மனைவி ஐஸ்வர்யா என்ற கேரக்டரில் சாய் காயத்திரி இதுவரை நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த சீரியலில் இருந்து விலகுவதாக கூறியிருந்தார். மேலும் இந்த சீரியலில் இனி வரும் கதைக்களம் தனக்கு திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என கூறியிருந்தார். இந்நேரத்தில் இனி ஐஸ்வர்யாவாக யார் நடிப்பார் என்ற கேள்வி ரசிகர் மத்தியில் எழுந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

பின் இந்த சீரியலில் முதலில் ஐஸ்வர்யாவாக நடித்த தீபிகா தான் மீண்டும் இந்த கேரக்டரில் நடிக்க போவதாக தகவல் பரவியது. இதை உறுதி செய்யும் வகையில் தீபிகா அவரது இன்ஸ்டா பக்கத்தில் சில வார்த்தைகளை கூறியுள்ளார். அதாவது” அதிர்ஷ்டம் ஒரு வாட்டி தான் கதவை தட்டும் என சொல்லுவாங்க. ஆனா முயற்சி, நம்பிக்கை நம்ம கிட்ட இருந்தா ஆயிரம் தடவ கூட அதிர்ஷ்டம் நம்மை தேடி வரும். ஐஸ்வர்யாவாக நடித்த என்னுடைய பயணம் பாதிலேயே முடிஞ்சுச்சு, ஆனா அது இப்போ எந்த இடத்தில் முடிஞ்சுதோ அதே இடத்தில் தொடங்க இருக்கிறது.

சரக்குல எந்த பிராண்ட் அடிப்பீங்க.., வில்லங்கமாக கேள்வி எழுப்பிய ரசிகர்.., நெத்தியடி பதிலை சொன்ன ஸ்ருதி ஹாசன்!!

பொதுவா நம்ம கிட்ட இருக்க ஒரு பொருள் நம்மை விட்டு போறப்ப அதோட வலி எப்படி இருக்குனு எனக்கு நல்லாவே தெரியும். ஆனா அந்த பொருள் திரும்ப இப்ப எனக்கு கிடைச்சிருக்கு. அதோட வேல்யூ என்னன்னு எனக்கு தெரியும். இவ்ளோ நாள் எனக்காக பிரேயர் பண்ணிக்கிட்ட என்னுடைய ரசிகர்களுக்கு ரொம்ப நன்றி. மேலும் ஐஸ்வர்யாவாக நடிக்க போற எனக்கு உங்களோட சப்போர்ட் எப்பவும் வேண்டும் என உருக்கமான சில வார்த்தைகளால் தனது ரசிகர்களுக்கு நன்றியை கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here