IND vs AUS 1st ODI: 188 ரன்களுக்குள் சுருண்ட ஆஸ்திரேலியா…, வேகத்தில் அசத்திய சிராஜ் & ஷமி!!

0
IND vs AUS 1st ODI: 188 ரன்களுக்குள் சுருண்ட ஆஸ்திரேலியா..., வேகத்தில் அசத்திய சிராஜ் & ஷமி!!
IND vs AUS 1st ODI: 188 ரன்களுக்குள் சுருண்ட ஆஸ்திரேலியா..., வேகத்தில் அசத்திய சிராஜ் & ஷமி!!

இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது 188 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து உள்ளது.

IND vs AUS:

இந்திய அணியானது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி களமிறங்கியது. இதில், டாஸ் வென்ற இந்தியா, பில்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்ய தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் 5 ரன்களில் வெளியேறி பெரும் ஏமாற்றத்தை தந்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இவரை தொடர்ந்து, ஸ்டீவ் ஸ்மித் 22, மார்னஸ் லாபுசாக்னே 15, ஜோஷ் இங்கிலிஸ் 26, கேமரூன் கிரீன் 12 என இந்திய வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். மறுபுறம் 65 பந்தில் 10 பவுண்டரி 5 சிக்ஸர் உட்பட 81 ரன்கள் விளாசிய மிட்செல் மார்ஷ், ஜடேஜா மற்றும் சிராஜ் கூட்டணியில் பெவிலியன் திரும்பினார்.

IND vs AUS 1st ODI: ரொனால்டோ ஸ்டையிலில் முகமது சிராஜ்…, விக்கெட் எடுத்ததும் செய்த செயல் வைரல்!!

இவரது விக்கெட்டுக்கு பிறகு களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்களில், கிளென் மேக்ஸ்வெல் 8, மார்கஸ் ஸ்டோனிஸ் 5, சீன் அபோட் 0 மற்றும் ஆடம் ஜம்பா 0 என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இதனால், ஆஸ்திரேலிய அணி 35.4 ஓவரில் 188 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில், இந்தியா சார்பாக, முகமது சிராஜ் மற்றும் ஷமி தலா 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2, குல்தீப் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here