IND vs AUS 1st ODI: ரொனால்டோ ஸ்டையிலில் முகமது சிராஜ்…, விக்கெட் எடுத்ததும் செய்த செயல் வைரல்!!

0
IND vs AUS 1st ODI: ரொனால்டோ ஸ்டையிலில் முகமது சிராஜ்..., விக்கெட் எடுத்ததும் செய்த செயல் வைரல்!!
IND vs AUS 1st ODI: ரொனால்டோ ஸ்டையிலில் முகமது சிராஜ்..., விக்கெட் எடுத்ததும் செய்த செயல் வைரல்!!

ஆஸ்திரேலிய அணி எதிரான முதல் ஒருநாள் போட்டியில், டிராவிஸ் ஹெட் விக்கெட்டை முகமது சிராஜ் வீழ்த்தியதும் ரொனால்டோவை போல செய்கைகளை செய்துள்ளார்.

முகமது சிராஜ்:

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஷ் களமிறங்கினர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த போட்டியில் டேவிட் வார்னர் மற்றும் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஆகியோர் பிளேயிங் லெவனில் சில காரணங்களால் இடம் பெறவில்லை. இதனை தொடர்ந்து நடைபெற்ற போட்டியின் ஆரம்பத்திலேயே சறுக்கலை சந்தித்தது. அதாவது, ஒருநாள் தரவரிசையில் நம்பர் 1. வீரரான முகமது சிராஜ் 2வது ஓவரை வீசினார்.

IND vs AUS 1st ODI: திடீரென ஒருநாள் தொடரில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய நட்சத்திரம்!!

இந்த ஓவரின் 1.6 பந்தை 139.6 கி.மீ வேகத்தில் வீசிய முகமது சிராஜ், டிராவிஸ் ஹெட்டை போல்டாக்கி அசத்தினார். பவர் பிளே ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்திய முகமது சிராஜ், தனது மகிழ்ச்சியை ரொனால்டோவின் கைகளை உயர்த்தி வானை நோக்கி உயர்ந்து கால்களை அகற்றும் “SIIUUUU” ஸ்டைலில் செய்தார். இவரது இந்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here