
லோகேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தை குறித்து ஒரு அப்டேட் சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.
லியோ திரைப்படம்
நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து, தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் தயாரித்து வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். அதுமட்டுமின்றி 200 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் லியோ படத்திற்கு மனோஜ் பரமஹம்சா என்பவர் ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அளவுகடந்த ஹைப்பை கூட்டியது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை இயக்குனர் மிஷ்கின் மற்றும் கெளதம் மேனன் நடிக்கும் பகுதிகள் முடித்துள்ள நிலையில், அர்ஜுன் படப்பிடிப்பில் களமிறங்கியுள்ளார். இந்நிலையில் லியோ படத்தை குறித்து ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
ஏ ஆர் ரஹ்மான் மகனுக்கு வந்த ஆபத்து.., நூலிழையில் உயிர் தப்பித்த சம்பவம்.., வைரலாகும் வீடியோ பதிவு!!!
அதாவது நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் உயர்தர கேமராவான Red V RAPTOR XL வகை கேமராவை தான் படக்குழுவினர் பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலும் இந்த கேமரா ஹாலிவுட்டில் தான் பயன்படுத்துவார்கள். இதற்கு முன்னர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்திலும் இந்த கேமராவை பயன்படுத்தினர். தற்போது லியோவிலும் Red கேமராவை வைத்து படமாக்கப்பட்டு வருகிறது. பீஸ்ட் மற்றும் லியோ படத்துக்கு ஒளிப்பதிவு மனோஜ் பரமஹம்சா என்பது குறிப்பிடத்தக்கது.
#LEO – V-Raptor XL Red Camera on board to shoot in 360⁰ with 4x speed of mocobot & monstro, 6K format shots & fire exposure scenes.. 🔥 #BloodySweet Surreal Visuals loading.. ❤️🔥pic.twitter.com/yK2NcPNeCS
— VCD (@VCDtweets) March 5, 2023