
கோலிவுட் திரையில் ஓ காதல் கண்மணி என்ற படத்தில் பாடகராக அறிமுகமானவர் தான் AR. அமீன். இப்படத்தில் இவர் ”மௌலானா வா சல்லீம்” என்ற பாடலை பாடியதற்கு சிறந்த பாடகர் என்ற விருதை பெற்றார். மேலும் இவரது தந்தை AR. ரஹ்மானுடன் சேர்ந்து இவர் இந்தியா முழுவதும் நடக்கும் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடி வருகிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இப்படி சினிமாவில் பிஸியாக இருந்துவரும் இவர் 2 நாட்களுக்கு முன் ஒரு பாடலுக்காக ஷூட்டிங் ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். அப்போது அவர்கள் பாடி கொண்டிருந்த அந்த மேடையில் அலங்கரிக்கப்பட்டிருந்த சரவிளக்கு அறுந்து விழுந்துள்ளது. அந்த நேரத்தில் அதிர்ஷ்டவசமாக அமீன் மற்றும் அவருடன் இருந்த இசை குழுவினர் உயிர் தப்பித்துள்ளனராம். இந்த தகவலை அமீன் தனது இன்ஸ்டா பக்கத்தில் உணர்வு பூர்வமான வார்த்தைகளால் பதிவிட்டுள்ளார்.
மாத்திரை மருந்து வாங்கக்கூட பணமில்லை.., பிதாமகன் பட தயாரிப்பாளரின் சோகமான நிலை!!
அதாவது” நான் இரு தினங்களுக்கு முன் ஒரு பாடலுக்காக படப்பிடிப்பில் இருந்தேன். அப்போது பாடல் பாடுவதில் கவனமாக இருந்த நேரத்தில் அங்கு கிரேனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விளக்கு அறுந்து விழுந்தது. ஆனால் அந்த விபத்தில் இருந்து நான் காப்பாற்றப்பட்டுள்ளேன். மேலும் இதற்கு ”எல்லாம் வல்ல இறைவன், எனது பெற்றோர், மற்றும் என்னுடைய ரசிகர்களின் ஆசிர்வாதம் தான் காரணம்” என குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram