
தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13 மற்றும் 14ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. தற்போது, தேர்வு மையங்களுக்கான அனைத்து இறுதிக்கட்ட பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத்துறை முக்கிய கோரிக்கையை வலியுறுத்தியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களை மட்டுமே தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்க வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த பொறுப்பினை வழங்கி விட கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
அட்ரா சக்க., ஜூன் 10 முதல் பெண்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை கன்பார்ம்! முதல்வர் அறிவிப்பு!!
மேலும் அப்படி கூடுதலான தலைமை ஆசிரியர் தேவைப்படும் பட்சத்தில் அரசு மேல்நிலை பள்ளிகளில் உள்ள அனுபவமுள்ள முதுநிலை ஆசிரியர்களை முதன்மை கண்காணிப்பாளர்களாக தேர்வு செய்து கொள்ளலாம் என தேர்வுகள் துறை அறிவுறுத்தியுள்ளது.