பிரபல நடிகரின் மகளை மணக்கும் தமிழக கிரிக்கெட் வீரர்..,ஒருவேளை அப்படி இருக்குமோ…,

0
பிரபல நடிகரின் மகளை மணக்கும் தமிழக கிரிக்கெட் வீரர்..,ஒருவேளை அப்படி இருக்குமோ...,
பிரபல நடிகரின் மகளை மணக்கும் தமிழக கிரிக்கெட் வீரர்..,ஒருவேளை அப்படி இருக்குமோ...,

நடிகர் தலைவாசல் விஜயின் மகள் ஜெயவீனாவுக்கும், தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் பாபா அபரஜுதுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

திருமண நிச்சயதார்த்தம்

தமிழ் திரைப்படங்களில் பல்வேறு வகையான குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் தலைவாசல் விஜய். இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இது தவிர தமிழ் சின்னத்திரையிலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு பங்களிப்பை தந்துள்ளார். இவரது மகள் ஜெயவீனா ஒரு நீச்சல் வீராங்கனை. இவர், மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அஜித்தை இயக்கும் மகிழ்திருமேனி?…பறிபோகும் விக்னேஷ் சிவன் வாய்ப்பு!!

இவருக்கும், தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் பாபா அபரஜுதுக்கும் திருமண நிச்சயர்த்தார்த்தம் நடைபெற்றுள்ளது. தற்போது 28 வயதான கிரிக்கெட் வீரர் பாபா அபரஜித், ரஞ்சி போட்டியில் அறிமுகமாகி தமிழக கிரிக்கெட் அணிக்காக பல்வேறு வகையான ஆட்டங்களில் விளையாடி உள்ளார். இவருக்கும், நீச்சல் வீராங்கனை ஜெயவீனாவுக்கும் நிச்சயதார்த்தம் முடிவு பெற்றுள்ள நிலையில் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. இது காதல் திருமணமா அல்லது பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமா என்று ரசிகர்கள் குழம்பிபோயுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here