அஜித்தை இயக்கும் மகிழ்திருமேனி?…பறிபோகும் விக்னேஷ் சிவன் வாய்ப்பு!!

0
அஜித்தை இயக்கும் மகிழ்திருமேனி?...பறிபோகும் விக்னேஷ் சிவன் வாய்ப்பு!!
அஜித்தை இயக்கும் மகிழ்திருமேனி?...பறிபோகும் விக்னேஷ் சிவன் வாய்ப்பு!!

நடிகர் அஜித் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதில் மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித்

முன்னணி நடிகர் அஜித் நடித்து திரையரங்குகளில் வெளியான ‘துணிவு’ திரைப்படம் நல்ல வசூலை குவித்து வருகிறது. இந்த திரைப்படத்தை எச்.வினோத் இயக்கி இருந்தார். இதைத் தொடர்ந்து நடிகர் அஜித் நடிக்க இருக்கும் புதிய திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதன்படி, விக்னேஷ் சிவன் மற்றும் அஜித் இணையும் திரைப்படம் எவ்வாறு அமையும் என ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் காணப்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பாதியிலேயே நின்று போன சிவகார்த்திகேயனின் மாவீரன் ஷூட்டிங்? படக்குழு திடீர் விளக்கம்!!

ஆனால், நடிகர் அஜித்தின் 62 ஆவது திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் இந்த தகவல் குறித்த உறுதியான அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் மகிழ் திருமேனி, தமிழ் மொழியில் ‘தடம்’, ‘மீகாமன்’, மாறும் ‘கலகத்தலைவன்’ போன்ற வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here