அந்த ஊருல திடீர் திடீர்னு உடையுதாம், சாயுதாம் .. காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் .. லியோ படக்குழு போட்ட அதிரடி ட்வீட்!!

0
அந்த ஊருல திடீர் திடீர்னு உடையுதாம், சாயுதாம் .. காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் .. லியோ படக்குழு போட்ட அதிரடி ட்வீட்!!
அந்த ஊருல திடீர் திடீர்னு உடையுதாம், சாயுதாம் .. காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் .. லியோ படக்குழு போட்ட அதிரடி ட்வீட்!!

நடிகர் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தை குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

லியோ திரைப்படம்:

தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். சமீபத்தில் இவர் நடித்த வாரிசு திரைப்படம் 300 கோடி கலெக்சன் அள்ளி வசூல் சாதனை படைத்தது. தற்போது சென்சேஷன் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் படைப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். Seven Screen Studio நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அளவுகடந்த வரவேற்பை பெற்றது. பல நட்சத்திரங்கள் நடித்து வரும் இப்படத்தின் ஷூட்டிங் தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தை குறித்து Seven Screen Studio தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதாவது நடிகர் விஜய் மற்றும் படக்குழுவினர் அனைவரும் காஷ்மீர் ஷூட்டிங்கில் பிசியாக இருந்து வரும் நிலையில் நிலநடுக்கம் போன்ற அதிர்வு ஏற்பட்டுள்ளது.

“எனக்கு என்னைக்குமே சூப்பர் ஸ்டார் தான் போட்டி”., அதுக்காக வச்சு செய்யாதீங்க? பவர் ஸ்டார் வேண்டுகோள்!!!

இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம், We are safe nanba என்று பதிவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சந்திரமுகி படத்தில் வடிவேலு பேசிய திடீர் திடீர்னு உடையுதாம், சாயுதாம் என்ற வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு குசும்பு ஆகாதுப்பா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here