“எனக்கு என்னைக்குமே சூப்பர் ஸ்டார் தான் போட்டி”., அதுக்காக வச்சு செய்யாதீங்க? பவர் ஸ்டார் வேண்டுகோள்!!!

0
"எனக்கு என்னைக்குமே சூப்பர் ஸ்டார் தான் போட்டி"., அதுக்காக வச்சு செய்யாதீங்க? பவர் ஸ்டார் வேண்டுகோள்!!!

தமிழ் திரையுலகின் பவர் ஸ்டார் சீனிவாசன் எனக்கு என்னைக்குமே சூப்பர் ஸ்டார் தான் போட்டி என தன்னுடைய பாணியிலே ஊடகங்களுக்கு சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

பவர் ஸ்டார்:

தமிழ் திரையுலகில் பல பிரபலங்கள் இருந்தாலும் ஒரு சில நடிகரின் எதார்த்தமான நடிப்பு வியக்க வைக்கும் வகையில் அமையும். அந்த வகையில் பவர் ஸ்டார் சீனிவாசன் “கண்ணா லட்டு தின்ன ஆசையா” படத்தில் நடிகர் சந்தானத்தை மிஞ்சும் வகையில் காமெடி செய்து மக்களை மகிழ்வித்து இருப்பார். இவரின் எதார்த்தமான பேச்சு திரையுலக ரசிகர்களுக்கும், மீம்ஸ்களுக்கும் அவ்வப்போது விருந்தாக அமைந்து வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால் தான் என்னவோ சமீப காலமாக இவரை பற்றிய செய்திகள் ஊடகங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திரைப்பட நிகழ்வில் கலந்து கொண்ட பவர் ஸ்டார் தன்னுடைய பாணியிலே பேச்சை ஆரம்பித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதன்படி “எனக்கு என்னைக்குமே சூப்பர் ஸ்டார் தான் போட்டி. நானும் 2008ம் ஆண்டு திரையுலகிற்கு அறிமுகமாகி இதுவரை 100 க்கும் மேல படம் நடிச்சுட்டேன்.

2023 தொடங்கிய முதல் 3 மாதங்களில் சுமார் 1.5 லட்சம் ஊழியர்கள் பணிநீக்கம்? ஷாக் ரிப்போர்ட்!!

100வது படம் தான் பிக்கப். இந்த படம் ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கும்னு நம்புறேன். தயவு செய்து ஊடகங்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள் வச்சுக்கிறேன். என்னை பற்றி தவறான செய்திகளை வெளியிட வேண்டாம். இதனால் உங்களுக்கு என்ன லாபம்னு தெரியல. ஆனால் அது என்னுடைய கேரியர ரொம்ப பாதிக்குது.” என சென்டிமெண்டாக கருத்துக்களை தெரிவித்துள்ளார். இத வச்சு நெட்டிசன்கள் என்ன செய்ய காத்திருக்காங்களோ தெரியல பொறுத்து இருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here