2023 தொடங்கிய முதல் 3 மாதங்களில் சுமார் 1.5 லட்சம் ஊழியர்கள் பணிநீக்கம்? ஷாக் ரிப்போர்ட்!!

0
2023 தொடங்கிய முதல் 3 மாதங்களில் சுமார் 1.5 லட்சம் ஊழியர்கள் பணிநீக்கம்? ஷாக் ரிப்போர்ட்!!
2023 தொடங்கிய முதல் 3 மாதங்களில் சுமார் 1.5 லட்சம் ஊழியர்கள் பணிநீக்கம்? ஷாக் ரிப்போர்ட்!!

கொரோனா பரவலால் உலகெங்கும் பொருளாதார வளர்ச்சி மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகிறது. இதில் சிக்கிய பல முன்னணி நிறுவனங்களும் நிதி நெருக்கடியை சமாளிக்க 1, 2 என ஒவ்வொரு கட்டமாக ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தலைமை நிறுவனமான மெட்டா கடந்த ஆண்டு முதல் கட்டமாக 12,000 ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு 2ம் கட்டமாக 10,000 ஊழியர்களும் இது தவிர கூடுதலாக 5,000 பேர்களையும் நீக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழ்நிலை சமூக ஊடக நிறுவனங்களிலோடு இல்லாமல் உலகளாவிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான்-யும் கூட விட்டு வைக்கவில்லை. அதன்படி கடந்த ஜனவரி மாதம் 18,000 ஊழியர்களை அதிரடியாக அமேசான் நிறுவனம் பணி நீக்கம் செய்தது. இதைத்தொடர்ந்து 2ம் கட்டமாக இன்னும் சில நாட்களில் 9,000 ஊழியர்களை நீக்கம் செய்யவுள்ளதாக அந்நிறுவன தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

12-ம் வகுப்பு பிரதான தேர்வுக்கு 45,000 மாணவர்கள் ஆப்சென்ட்.., வெளியான ஷாக் ரிப்போர்ட்!!!

இப்படி ஒரு பக்கம் இருக்க கூகுள் நிறுவனமும் தங்களின் பணியாளர்கள் 12,000 பேரை பணிநீக்கம் செய்தது உலகளவில் பெரும் அதிர்வலையை உண்டாக்கியது. இதனால் இந்த ஆண்டு தொடக்கம் முதல் சுமார் 503 நிறுவனங்களில் இதுவரை சுமார் 1,48,165 ஊழியர்கள் பணி நீக்கம் செய்துள்ளதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. எனவே முன்னணி நிறுவனங்களில் வேலை செய்து வருகிறோம் என ஊழியர்கள் பெருமைப்பட்ட காலங்கள் மறைந்து எப்போது வேண்டுமானாலும் வேலையை விட்டு தூக்கிருவாங்களோ? என பீதியிலே இருந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here