“நாளைய தீர்ப்பு முதல் மாஸ்டர் வரை” – தளபதி விஜயின் 28 ஆண்டுகால சினிமா பயணம்!!

0

தமிழகத்தில் என்றும் தளபதியாகவே மக்கள் மனதில் நிலைத்து இருப்பவர் விஜய். இன்றோடு விஜய் திரையுலகிற்கு வந்து 28 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது. இதனை அவரின் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

தளபதி விஜய்

எந்த ஒரு துறையை எடுத்துக் கொண்டாலும் அதில் முதலில் கால் பாதிக்கும்போது பல சரிவுகளை பார்ப்பது சகஜம் தான். ஆனால் அதை எல்லாம் கடந்து வந்தால் மட்டுமே சாதிக்கவும் முடியும். அப்படி பட்ட ஒருவர் தான் இப்பொழுது மக்களின் தளபதியாக இருப்பவர். இவரின் தந்தை எஸ்.எஸ்.சி இயக்குனர் என்பதால் சிறு வயதில் இருந்தே இவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை பற்றி விஜயின் தந்தையே ஒரு பேட்டியிலும் கூறியுள்ளார். முதன்முதலில் அவர் நடிக்க வேண்டும் என்று சொல்லியபோது அவரது அப்பாவிற்கு அதிர்ச்சியாக தான் இருந்ததாம். அதன் பிறகு தான் விஜயை வைத்து அவரது அப்பா நாளைய தீர்ப்பு என்ற படத்தை இயக்கினார். ஆனால் விஜய்க்கு அந்த படம் தோல்வியிலேயே முடிந்தது.

இந்த படம் வெளியானதும் பல விமர்சனங்களுக்கும் ஆளானார் விஜய். இதெல்லாம் ஒரு மூஞ்சின்னு காசு கொடுத்து வேறு பாக்கணுமா?? என்று பிரபல பத்திரிகையில் கூட செய்திகள் வந்தது. ஆனாலும் விஜய் சோர்வடையவில்லை. அடுத்ததடுத்து பல படங்களில் நடித்தார். அதன் பின் 4 வருடங்களுக்கு பிறகே பூவே உனக்காக என்ற படம் வெற்றி பெற்றது.

மிடுக்கான உடையில் மஜாவாக போஸ் கொடுத்த சமந்தா!!

அதில் விஜய் நடிப்பு மக்கள் மத்தியில் பேசப்பட்டது. மேலும் கதாநாயகன் என்ற அங்கீகாரத்தையும் பெற்று தந்தது. மேலும் விஜய்க்கு நடனமாட தெரியாது என்பது போல அசிங்கப்படுத்தியும் உள்ளனர். இதற்காகவே விடாப்பிடியாக நடனத்தை கற்றுக்கொண்டுள்ளார். தற்போது தளபதி ரேஞ்சுக்கு ஆடுபவர்கள் யார் உள்ளார்?? என்ற அளவிற்கு மாறியுள்ளார் விஜய்.

அதற்கடுத்து திருமலை படமே அவரை ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுக்க வைத்தது. இவருக்கு தளபதி ரசிகர்கள் மன்றம் என்றே தனியாகவும் உருவாக்கப்பட்டது. நாளுக்கு நாள் இளமையாகவே மாறிக்கொண்டிருக்கும் விஜய் தற்போது வரை திரையுலகில் நிலைத்து இருக்கிறார். மேலும் பிகில் படமும் பாக்ஸ் ஆபீஸில் 300 கோடியை தாண்டியது. இதோடு 64 படங்கள் வரை விஜய் நடித்துள்ளார். திரையுலகிற்கு வந்து 28 வருடங்கள் ஆகிறது. இந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here