நாளை பள்ளிகளுக்கு விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!!

0

தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பரவலாக கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதனால் பள்ளிகளைவித்துறை இணை இயக்குனர் மாணவர்களின் நலன் கருதி நாளை பள்ளிகளுக்கு விடுமுறையினை அறிவித்துள்ளார்.

புயல் மற்றும் கனமழை:

வங்கக்கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 29 ஆம் தேதி உருவாகியது. அதற்கு முன்னர் “நிவர்” புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளை தாக்கியது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருவாகி “புரெவி” என்ற புயலாக உருவாகியது. இந்த புயல் தற்போது ராமநாதபுரம் பகுதியில் கடந்த 2 மணி நேரமாக ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படி இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதால் கடந்த 2 நாட்களாக புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்குகின்றது. அதே போல் இன்னும் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் கனமழை அதிக அளவில் பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தின் 17 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டு விட்டது. தற்போது புதுச்சேரியிலும் கனமழை அதிக அளவில் பெய்ந்து வருவதால் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி புதுச்சேரியின் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் எ.மைக்கேல் பொன்னோ இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here