இந்திய அணி பேட்டிங், ‘யார்கர்’ நடராஜனுக்கு வாய்ப்பு – IND vs AUS டி20 அப்டேட்!!

0

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டி20 போட்டி தலைநகர் கான்பெர்ராவில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார். இந்த ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய அணியில் யார்கர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஐபிஎல் தொடரில் தனது பவுலிங்கால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணற வைத்த நடராஜன், முதல் சர்வதேச டி20 தொடரில் இன்று விளையாட உள்ளார். ஏற்கனவே 3வது ஒருநாள் போட்டியில் 2 விக்கெட் வீழ்த்தி தனது கணக்கை தொடங்கி விட்டார். இதனால் இன்றைய போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இழந்து விட்ட காரணத்தால், டி20 தொடரை கைப்பற்ற அதிக முனைப்பு காட்ட வேண்டி இருக்கும்.

விளையாடும் 11 அணி:

இந்தியா – ஷிகர் தவான், கே.எல்.ராகுல் (WK), விராட் கோலி (C), மணீஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், முகமது ஷமி, டி நடராஜன்

ஆஸ்திரேலியா – ஆர்சி ஷார்ட், ஆரோன் பிஞ்ச் (C), மேத்யூ வேட் (WK), ஸ்டீவன் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், மிட்ச் ஸ்வெப்சன், சீன் அபோட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here