இன்றைக்கு தங்க நகை வாங்கலாமா?? வேணாமா?? விலை நிலவரம் இதுதான்!!

0

கடந்த சில தினங்களாக அதிரடியாக குறைந்து வந்த தங்க விலை தொடர்ச்சியாக மூன்று நாட்களாக அதிரடியாக உயர்ந்து வந்தது. இதனை அடுத்து இன்று தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இதோ..

கொரோனா பரவல்:

பெண்கள் என்றால் ஆடை அணிகலன்களுடன் இருந்தால் அது ஒரு தனி அழகு தான். அதிலும், குறிப்பாக தங்கம் மற்றும் வெள்ளி அணிந்திருந்தால் மேலும் அழகாக இருப்பார்கள். இதன் காரணமாகவே பெண்கள் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்வதனை அதிகமாக விரும்புவர், அதே சமயம் பாதுகாப்பாகவும் கருதுவர். இப்படியாக அனைவருக்கும் பிடித்த தங்கம் கொரோனா பரவலால் உச்சகட்ட விலையினை அடைந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பாதுகாப்பான முதலீடாக தங்கம் கருதப்பட்டதால் அனைவரும் அதில் தான் தங்களது எதிர்கால நலன் கருதி முதலீடு செய்தனர். வரலாறு காணாத அளவு தங்கம் ஒரு சவரன் 40 ஆயிரத்திற்கும் அதிகமாக விற்கப்பட்டது. பின், படிப்படியாக குறைந்து இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து அதிரடியாக குறைந்தது. பின், கடந்த 3 நாட்களாக மீண்டும் உயர்ந்து வந்தது.

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரத்தில் எந்த வித மாற்றமும் இல்லை. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) ரூ.4,656 என்று விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் ஒரு சவரன் ரூ.37,248 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கம் (24 கேரட்) ஒரு கிராம் ரூ.5,036 என்றும் ஒரு பவுன் ரூ.40,288 என்று விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.50 என்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.67,500 என்றும் விற்பனை செய்யப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here