வெளிநாட்டு நடிகையுடன் ஜோடி சேர இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் – sk 20 நியூ அப்டேட் !!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்த முக்கிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன்:

விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாறியவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது டான் படத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்து அந்த படத்தின் ரிலீஸ்க்காக வெயிட் செய்து வருகிறார்.  மேலும் இவர் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் என்பவர் இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நடிகர்கள் நவீன் பொலீஸெட்டி, சத்யராஜ் மற்றும் பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

இந்த படத்தின் ஹீரோயின் யார் என்ற விவரம் இன்னும் வெளிவராமல் இருந்த நிலையில் தற்போது தெலுங்கில் நடிகர் ராம்சரண் நடிப்பில் வெளிவர உள்ள ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் நாயகியாக நடித்த வெளிநாட்டு நடிகை ஒலிவியா மோரிஸ் என்பவரை கமிட் செய்ய இருப்பதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. மேலும் இந்த படத்தின் கதையின் படி நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வெளிநாட்டு பெண் தான் ஹீரோயினாக வர வேண்டுமாம். அதனால் தான் தற்போது ஆர் ஆர் ஆர் பட நாயகியை தேர்வு செய்ய இருப்பதாக தகவல் வந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here