
நடிகர் சல்மான்கானுக்கு நேற்று முன்தினம் கொலை மிரட்டல் இ-மெயில் மூலம் வந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சல்மான் கான்
பாலிவுட் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சல்மான் கான். தற்போது கிசி கா பாய் கிசி கி ஜான், புலி 3 போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவரின் தனிப்பட்ட உதவியாளரான பிரசாந்த் குஞ்சல்கருக்கு நேற்று முன்தினம் கொலை மிரட்டல் கொடுக்கும் விதமாக ஒரு மெயில் வந்துள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது மும்பையில் பிரபல ரவுடிகளான லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோர் நடிகர் சல்மானுக்கு கொலை மிரட்டல் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து இந்த கும்பல் மீது சல்மான்கான் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறை அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
அந்த ரவுடிகள் ஏற்கனவே நடந்த பஞ்சாப் பாடகர் சிந்து மூஸ்வாலா கொலை வழக்கில் சிக்கியவர்கள் என்பது தெரிய வந்தது. இதனால் சல்மான் கான் வீட்டை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கடிதம் மூலம் கொலை மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.