உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் மாற்றம்…, 3 வது இடத்தை இழந்த இலங்கை!!

0
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் மாற்றம்..., 3 வது இடத்தை இழந்த இலங்கை!!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் மாற்றம்..., 3 வது இடத்தை இழந்த இலங்கை!!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிந்துள்ள நிலையில், ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் புள்ளி பட்டியலில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

ஐசிசி:

ஐசிசி சார்பாக நடத்தப்படும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தற்போது 2வது சீசனுக்கான இறுதிப் போட்டியை எதிர்நோக்கி உள்ளது. கடந்த 2021 ஆண்டு முதல் தொடங்கப்பட்ட இந்த 2வது சீசன் 9 அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்தது. சுழற்சி முறையில் நடைபெற்ற இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்த ஆஸ்திரேலிய அணி 66.67 சதவீதத்துடன் முதலிடம் பிடித்து இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனை தொடர்ந்து, இந்திய அணியும் சமீபத்தில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம், 58.8%-த்துடன் 2ஆம் அணியாக, தொடர்ந்து 2 வது முறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. தற்போது, இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிவடைந்ததை அடுத்து, இந்த புள்ளிபட்டியலில், 3 ஆம் இடத்தில் இருந்து மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

ஐபிஎல் தொடருக்கு தயாரான யார்க்கர் கிங் டி. நடராஜன்…, இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பாரா??

அதாவது, நியூசிலாந்து அணிக்கு எதிராக 2 தொடரையும் இழந்த இலங்கை அணி, 3வது இடத்தில் இருந்து, 44.44% த்துடன் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், தென் ஆப்பிரிக்கா (55.56%) மற்றும் இங்கிலாந்து (46.97%) 3 மற்றும் 4வது இடத்தில் உள்ளனர். மேலும், நியூசிலாந்து (38.46%), பாகிஸ்தான் (38.1%), வெஸ்ட் இண்டீஸ் (34.62%) மற்றும் பங்களாதேஷ் (11.11%) என கடைசி 4 இடங்களை பிடித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here