
தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் ஒரு முக்கிய சீரியல் தான் ராஜா ராணி 2. இதில் சந்தியா தனது உயர் அதிகாரியின் ஆணைக்கிணங்க ரவுடியை சுட்டு தன் என்கவுண்டரை முடித்துள்ளார். இதனால் சிவாகாமி அவர் மீது கோவத்தில் இருந்து வரும் நிலையில் அவர் செய்தது சரி தான் என்று கோயில் பூசாரி கூறுகிறார். இதன் பிறகு சந்தியா செய்தது தவறு இல்லை என சிவகாமி ஏற்றுக்கொள்கிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இப்படியான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் கடந்த சில நாட்களாக டிஆர்பியில் பின்னடைவை சந்தித்து வருகிறது. எனவே இந்த சீரியலின் கதை களத்தை இன்னும் விறுவிறுப்பாக வேண்டிய கட்டாயத்தில் இந்த சீரியல் குழு உள்ளது.இதன் விளைவாக இதில் முக்கியமான நெகட்டிவ் ரோலில் நடித்து வந்த பார்வதியின் காதலன் விக்கி மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார்.இவர் ஜீ தமிழின் தவமாய் தவமிருந்து சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
மேலும் இதில் பார்வதியாக நடித்து வந்த வைஷ்ணவி தற்போது பொன்னி என்ற நியூ சீரியலில் முக்கிய கேரக்டரில் நடிக்க கமிட்டாகியுள்ள நிலையில் பல நாட்களுக்கு பிறகு இவர் இனி ராஜா ராணி 2 வில் பார்வதியாக தன் நடிப்பை தொடர உள்ளார். இந்த நேரத்தில் பார்வதி விஷயத்தில் தான் செய்த குற்றத்திற்காக ஜெயிலுக்கு சென்ற விக்கி, ரில்லிஸாகி வெளியே வருகிறார். இதன் பின் இவரால் பார்வதிக்கு பெரிய பிரச்சனை வருவது மாதிரியான, அனல் பறக்கும் காட்சிகளுடன் இனி இந்த சீரியல் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.