இரண்டும் ஒன்றை ஒன்று சந்திக்கும் போது…,கபில்தேவ் உடன் நடிகர் ரஜினி – வைரல் புகைப்படம்…,

0
இரண்டும் ஒன்றை ஒன்று சந்திக்கும் போது...,கபில்தேவ் உடன் நடிகர் ரஜினி - வைரல் புகைப்படம்...,
இரண்டும் ஒன்றை ஒன்று சந்திக்கும் போது...,கபில்தேவ் உடன் நடிகர் ரஜினி - வைரல் புகைப்படம்...,

தென்னிந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினி உடன் இணைந்து தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராப் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இப்போது, ‘ஜெயிலர்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகும் ‘லால் சலாம்’ படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான படப்பிடிப்பு வேலைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

‘புஷ்பா’ தி ரிட்டர்ன்ஸ்….,படக்குழு வெளியிட்ட முக்கிய தகவல்….,

அந்த வகையில், ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினி சென்னையில் இருந்து இன்று மும்பை சென்றுள்ளார். இதற்கிடையில், மும்பையில் வைத்து நடிகர் ரஜினிகாந்த் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here