வெற்றி இயக்குனருடன் கூட்டணி வைத்த சூப்பர் ஸ்டார் .., தரமான சம்பவங்களுடன் உருவாகும் ரஜினி 170!!!

0
வெற்றி இயக்குனருடன் கூட்டணி வைத்த சூப்பர் ஸ்டார் .., தரமான சம்பவங்களுடன் உருவாகும் ரஜினி 170!!!
வெற்றி இயக்குனருடன் கூட்டணி வைத்த சூப்பர் ஸ்டார் .., தரமான சம்பவங்களுடன் உருவாகும் ரஜினி 170!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்து நடிக்க இருக்கும் படத்தை குறித்து படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

ரஜினிகாந்த்:

தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் நடிகராக ரசிகர்களை கவர்ந்து முன்னணி ஹீரோவாக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் இப்படத்தை “டான்” பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்த நிலையில், சில காரணத்தால் ரஜினி 170 படம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனிடம் சென்றது. ஆனால் அதுவும் கைகூடவில்லை. இப்படி வர இயக்குனர் எல்லாம் ஏதாவது காரணத்தை சொல்லி படத்தில் இருந்து விலகி வருகின்றனர். இந்த நிலையில் ரஜினியின் 170 வது படத்தை குறித்து முக்கியமான அப்டேட் ஒன்றை லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சூப்பர் ஸ்டாரின் மனைவி மீது எஃப்ஐஆர் போட்ட காவல்துறை.., திரையுலகில் ஏற்பட்ட பரபரப்பு சம்பவம்!!

அதாவது ரஜினியின் 170 வது படத்தை ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் ராஜா இயக்க இருப்பதாகவும், இப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் லைக்கா நிறுவனம் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இப்படம் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கிறது என்று கூறியுள்ளனர். இந்த தகவலை அறிந்த ரஜினி ரசிகர்கள் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here