
தமிழகத்தில் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளை ஆங்கில வழியில் சிரமப்பட்டு படிக்கும் மாணவர்களுக்கு தற்போது தமிழில் புத்தகங்கள் மொழிபெயர்க்கப்பட்டு வருவதாக பாடநூல் கழகத் தலைவர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழ் புத்தகங்கள்
தமிழகத்தில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அரசு பல்வேறு வகையான நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், அடுத்த (2023-204) கல்வியாண்டில் அரசு உதவிப்பெறும் பள்ளிகள்/தனியார் பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசு சார்பாக விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2023-24 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் – நிதியமைச்சர் இன்று (மார்ச் 2) ஆலோசனை!
மேலும் இது தொடர்பாக பாடநூல் கழகத் தலைவர் கூறியதாவது, வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மட்டுமின்றி தனியார் பள்ளிகளிலும் தமிழ் வழி முறையில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் பாடப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டமையால் வழக்கத்தை விட கூடுதலாக பாடப் புத்தகங்கள் அச்சடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பொறியியல், மருத்துவ படிப்புகளை மாணவர்கள் எளிமையாக தமிழ் மொழியிலே படிப்பதற்கு ஏதுவாக தமிழ் மொழியில் பாடப்புத்தகம் மொழி பெயர்க்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார். அதன்படி இதுவரை பொறியியல் படிப்பிற்கு 25 புத்தகங்களும், மருத்துவ படிப்பிற்கு 5 புத்தகங்களும் தமிழில் மொழியில் தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது. இதுபோன்று மேலும் 13 புத்தகங்கள் தமிழ் மொழியாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதாகவும் அறிவித்துள்ளார்.