சூப்பர் ஸ்டாரின் மனைவி மீது எஃப்ஐஆர் போட்ட காவல்துறை.., திரையுலகில் ஏற்பட்ட பரபரப்பு சம்பவம்!!

0
சூப்பர் ஸ்டாரின் மனைவி மீது எஃப்ஐஆர் போட்ட காவல்துறை.., திரையுலகில் ஏற்பட்ட பரபரப்பு சம்பவம்!!
சூப்பர் ஸ்டாரின் மனைவி மீது எஃப்ஐஆர் போட்ட காவல்துறை.., திரையுலகில் ஏற்பட்ட பரபரப்பு சம்பவம்!!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மனைவி கவுரி கான் மீது தொழில் அதிபர் ஒருவர் காவல்துறையிடம் புகார் அளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ஷாருக்கான்:

பாலிவுட் வட்டாரங்களில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஷாருக்கான். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி இப்படம் பாலிவுட்டில் இதுவரை எந்த திரைப்படமும் செய்யாத வசூலை பெற்று வசூல் சாதனை படைத்தது. தற்போது அட்லி இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார் ஷாருக்கான். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிவு கட்டத்தை நெருங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிலையில் ஷாருக்கானின் மனைவி கவுரி கான் மீது தொழில் அதிபர் ஒருவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். அதாவது ஷாருக்கானின் மனைவி கவுரி கான் சினிமாவில் தயாரிப்பாளராகவும், காஸ்டியூம் டிசைனராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் மும்பை தொழிலதிபர் ஜஸ்வந்த் ஷா லக்னோவில் துல்சியானி கட்டுமான நிறுவனத்தின் அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்குவதற்காக முன் தொகையாக 86 லட்சம் கொடுத்திருந்தார் என்றும் ஆனால் அவருக்கு அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் பிளாட்டை கொடுக்காமல் பணத்தை மட்டும் வாங்கி ஏமாற்றி விட்டதாக தெரிவித்தார்.

“ஸ்ரேயாஸ் ஐயர் சரியான பயந்தாங்கொள்ளி”…, ஆஸ்திரேலிய கேப்டன் ஓபன் டாக்!!

மேலும் இந்த நிறுவனத்திற்கு பிராண்ட் அம்பாசிடர் ஷாருக்கானின் மனைவி கவுரி கான் தான். அவரின் விளம்பரத்தை பார்த்து தான் நான் பணத்தை கொடுத்தேன் என்று கூறி புகார் காவல்துறையிடம் புகார் அளித்தார். இதனால் கவுரி கான் மீதும் அந்த நிறுவனத்தின் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 409 என்ற பிரிவின் கீழ் காவல்துறையினர் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here