
இந்திய அணிக்கு எதிரான 3வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 197 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
IND vs AUS:
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியை இந்திய அணி இந்தூரின் ஹோல்கர் மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில், டிராவிஸ் ஹெட்டை ஜடேஜா 9 ரன்களிலேயே வெளியேற்றினார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
டிராவிஸ் ஹெட் வெளியேறிய பிறகு, உஸ்மான் கவாஜாவுடன் இணைந்த மார்னஸ் லாபுசாக்னே 2 வது விக்கெட்டுக்கு 96 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனால், ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் உயர தொடங்கியது. இதன் பிறகு, தனது அபாரமான சுழற் பந்து வீச்சால் ஜடேஜா, இந்த ஜோடியை பிரிக்க, ஆஸ்திரேலிய அணி முதல் நாளில் 4 விக்கெட் இழப்புக்கு 156 ரன்களை குவித்திருந்தது.
பார்முக்கு திரும்பிய மான்செஸ்டர் யுனைடெட் அணி…, FA CUP-யில் காலிறுதிக்கு முன்னேற்றம்!!
இதையடுத்து இன்று தொடங்கிய 2 ஆம் நாளில், இந்திய பந்து வீச்சாளர்களான அஸ்வின் (3) மற்றும் உமேஷ் யாதவ் (3) ஆரம்பம் முதலே தங்களது விக்கெட் வேட்டையை தொடங்கினர். இதனால், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 19, கேமரூன் கிரீன் 21, அலெக்ஸ் கேரி 3, மிட்செல் ஸ்டார்க் 1, நாதன் லியோன் 5 மற்றும் டாட் மர்பி 0 என அடுத்தடுத்து ஆஸ்திரேலிய அணி விக்கெட்டை இழந்தது. இதன் விளைவால், ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 197 சுருண்டு, இந்திய அணியை விட 88 ரன்கள் முன்னிலை பெற்றது.