இதுல தலையிடவே மாட்டேன்.., எல்லாம் அவங்க பாடு.., முக்கிய விஷயத்தை வெளியிட்டபிரபு தேவா!!

0
இதுல தலையிடவே மாட்டேன்.., எல்லாம் அவங்க பாடு.., முக்கிய விஷயத்தை வெளியிட்டபிரபு தேவா!!
இதுல தலையிடவே மாட்டேன்.., எல்லாம் அவங்க பாடு.., முக்கிய விஷயத்தை வெளியிட்டபிரபு தேவா!!

நடன இயக்குனர் மற்றும் நடிகருமான பிரபு தேவா சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தனது குழந்தைகள் பற்றி சில வார்த்தைகள் பேசியுள்ளார்.

நடிகர் பிரபுதேவா

தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டர், இயக்குனர், நடிகர் என பன்முக திறமைகளை கொண்டு அசத்தி வருபவர் தான் பிரபு தேவா. ஆரம்பத்தில் தனது நடனத்தால் ரசிகர்களை புல்லரிக்க செய்தவர், தற்போது ஹீரோவாக மெய்சிலிர்க்க வைத்து வருகிறார். இவர் இயக்கத்தில் வெளிவந்த போக்கிரி திரைப்படம் விஜய்யின் கேரியரில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றது. அந்த அளவிற்கு படம் விமர்சன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் இவர்களது காம்போவில் மீண்டும் உருவான வில்லு திரைப்படம் படுதோல்வி அடைந்து மண்ணை கவ்வியது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்பொழுது நடிப்பு ஒரு பக்கமும், நடனம் ஒரு பக்கமும் தனது முழு நேரத்தை செலவழித்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் உருவாகி வரும் பகிரா படத்தை இயக்குனர்கள் ஆதிக் ரவிச்சந்திரன் – ரவி கந்தசாமி இயக்கி வருகின்றனர். படு திரில்லராக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தனது மகன்களை குறித்து பேசியுள்ளார். அதாவது இதற்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் எனது மகன் என்னிடம் சினிமாவுக்குள் வர ஆசைப்படுகிறேன் என்று கூறினார்.

ஆதரவின்றி அசிங்க பேச்சுக்கு ஆளான சகோதரிகள்.., துணை நிற்கும் குமரன்.., மகாநதி ப்ரோமோ ரிலீஸ்!!

அவர் அப்படி சொல்லவும் ஷாக் ஆயிட்டேன். ஏனென்றால் சினிமா லேசு பட்ட காரியம் கிடையாது என்று பிரபு தேவா ஒரு மேடையில் பேசியிருந்தார். தற்போது அதனைக் கேள்வியாக சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தொகுப்பாளர் பிரபு தேவாவிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் நான் எந்த அட்வைஸ்-ம் கொடுக்க மாட்டேன். அடிச்சுப்பிடிச்சு அவங்களா தான் மேல வரணும் கூறினார். அவர் பேசியதை வைத்து பார்க்கும் பொழுது கூடிய விரைவில் அவரின் மகன்கள் சினிமாவுக்குள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here