
புதிதாக கட்ட இருக்கும் நடிகர் சங்க கட்டிடத்திற்கு, நடிகர் கேப்டன் விஜயகாந்தின் பெயரை வைக்க வேண்டும் என்று பிரபல காமெடி நடிகர் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார்.
கேப்டன் விஜயகாந்த்:
கோலிவுட் திரையுலகில் முன்னணி ஆக்சன் ஹீரோவாக கொடிகட்டி பறந்து கொண்டிருந்தவர் தான் நடிகர் விஜயகாந்த். இவர் நடிப்பு மட்டுமின்றி அரசியலிலும் கால் பதித்து எதிர்க்கட்சி தலைவராக விளங்கியவர். குறிப்பாக நடிகர் சங்க தலைவராக இவர் பொறுப்பில் இருந்த போது எல்லாம் கடனை அடைத்து நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தவர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் நடிகர் விஷால் நடித்த ‘மார்க் ஆண்டனி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசி விஷால், நடிகர் சங்க கட்டிடம் சரியாக இன்னும் ஒரு ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்றும், அதில் கேப்டன் விஜயகாந்துக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்று நேற்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நடிகர் சங்க கட்டிடத்திற்கு கேப்டன் விஜயகாந்த் பெயரை வைக்க வேண்டும் என பிரபல நடிகர் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார்.
விரைவில் “வடசென்னை” பார்ட் 2 ஷூட்டிங் ஸ்டார்ட்.., அதிகாரபூர்வ தகவலை வெளியிட்ட வெற்றிமாறன்
அதாவது பிரபல காமெடி நடிகரான மீசை ராஜேந்திரன், கேப்டன் விஜயகாந்த் சினிமா துறையில் பல நடிகர்கள், இயக்குனர்களை உருவாக்கியவர். அதுமட்டுமின்றி நடிகர் சங்க கடனை அடைத்தவர். மேலும் எல்லோருடைய மனதிலும் இடம் பிடித்தவர். எனவே பாராட்டு விழாவுடன், நடிகர் சங்க கட்டிடத்திற்கு கேப்டன் விஜயகாந்த் பெயரை வைக்க வேண்டும் என்று விஷாலுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்