தமிழகத்தின் இந்த பகுதி மெட்ரோ பணிகள் திடீர் நிறுத்தம்., திட்டத்தை கைவிட நிர்வாக முடிவு!!

0
தமிழகத்தின் இந்த பகுதி மெட்ரோ பணிகள் திடீர் நிறுத்தம்., திட்டத்தை கைவிட நிர்வாக முடிவு!!
தமிழகத்தின் இந்த பகுதி மெட்ரோ பணிகள் திடீர் நிறுத்தம்., திட்டத்தை கைவிட நிர்வாக முடிவு!!

சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளும் விரைவாக நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 118 கி.மீ. தொலைவில் 128 ரயில் நிலையங்கள் அமைக்க உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் 48 ரயில் நிலையங்களுக்கு சுரங்கப்பாதை மூலம் வழித்தடம் அமைக்கும் பணியில் 6 ரயில் நிலையங்களை கைவிட திட்டமிடப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதன்படி புரசைவாக்கம் அருகே உள்ள டௌடன் ஜங்ஷன், பட்டினப்பாக்கம், மீனாட்சி கல்லூரி, தபால் பெட்டி, நடேசன் பூங்கா மற்றும் செயின்ட் ஜோசப் கல்லூரி என 6 ரயில் நிலையங்களும் மிக குறுகிய வளைவில் அடுத்தடுத்து 1 கி.மீ.க்கும் குறைவான தூரத்தில் உள்ளது. இதனால் இந்த நிலையங்களில் சுரங்கப்பாதை பணியை ரத்து செய்வதன் மூலம் சுமார் ரூ.1200 கோடி செலவினம் தவிர்க்கப்படுவதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

அட்ரா சக்க., பள்ளி மாணவர்களின் கல்வி உதவித் தொகை ரூ.25,000 ஆக உயர்வு! அரசு அறிவிப்பு!!

இந்நிலையில் இந்த நடவடிக்கையை கண்டித்து தபால் பெட்டி பகுதி மக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் இதுபோன்ற சிறு சிறு மாற்றங்கள் மூலம் திட்டப்பணி ரூ.89,000 கோடியில் இருந்து ரூ.61,843 கோடியாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here