
தெலுங்கு சினிமாவில் பல கோடி வெற்றி வசூலை ஈட்டிய திரைப்படம் தான் புஷ்பா திரைப்படம். இதில் ஹீரோவாக அல்லு அர்ஜுன் மற்றும் ஹீரோயினாக ராஷ்மிகா நடிக்க, இதை இயக்குனர் சுகுமார் இயக்கியிருந்தார். மேலும் இப்படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு சமந்தா நடனமாடி இருந்த நிலையில் இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்து வந்தது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
மேலும் இப்படம் 5 மொழியில் வெளியிட பட்டு 350 கோடி வரை கல்லா கட்டி வந்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் புஷ்பா தீ ரூல் என்ற பெயரில் உருவாகி வருகிறது. இது தவிர இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்த பெண்ணாக நடிக்க ஆக்ட்ரேஸ் சாய் பல்லவி நடிக்க கமிட்டாகியுள்ளார் நடித்து வருகிறார்.
இதுபோக இப்படத்தின் டீசர் அடுத்த மாதம் அல்லு அர்ஜுன் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக அன்று ரிலீஸ் செய்ய உள்ளது. மேலும் இப்படத்தின் ப்ரீரில்லீஸ் வசூல் தற்போது வரை 1000 கோடியை எட்டியுள்ளது என்ற ஒரு தகவல் அரசல் புரசலாக இணையத்தில் உலாவி வருகிறது. மேலும் இதை வைத்து பார்க்கும்போது பாலிவுட் திரையில் வெற்றி மகுடம் சூடப்பட்டு வந்த ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கான வசூலை இப்படம் ஓவர் டேக் செய்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.