விரைவில் “வடசென்னை” பார்ட் 2 ஷூட்டிங் ஸ்டார்ட்.., அதிகாரபூர்வ தகவலை வெளியிட்ட வெற்றிமாறன்

0
விரைவில்
விரைவில் "வடசென்னை" பார்ட் 2 ஷூட்டிங் ஸ்டார்ட்.., அதிகாரபூர்வ தகவலை வெளியிட்ட வெற்றிமாறன்

இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை படத்தின் ஆடியோ லாஞ்சில் தனுஷ் நடித்த வடசென்னை பார்ட் 2 குறித்து ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

வெற்றிமாறன்:

தமிழ் சினிமாவில் தனுஷை வைத்து ஆடுகளம், பொல்லாதவன், அசுரன் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணியில் இருப்பவர் தான் இயக்குனர் வெற்றிமாறன். தற்போது புரோட்டா சூரியை வைத்து விடுதலை என்ற படத்தை இரண்டு பாகங்களாக எடுத்து வருகிறார். இந்நிலையில் விடுதலை படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதில் இயக்குனர் வெற்றிமாறன், நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா உள்பட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். அந்த மேடையில் வெற்றிமாறன் பேசிய போது, ரசிகர்கள் அனைவரும் தனுஷ் நடித்த வடசென்னை படத்தின் பார்ட் 2 அப்டேட் குறித்து கேள்விகள் எழுப்பினர்.

நாயகன் மீண்டும் வாரான்.., துருவ் விக்ரம் காத்திருப்புக்கு கிடைத்த பரிசு.., ரசிகர்கள் வாழ்த்துமழை!!

ரசிகர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் விதமாக வெற்றிமாறன் தரமான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அவர் கூறியதாவது, தற்போது வெளியாக இருக்கும் விடுதலை படத்தின் இரண்டு பாகங்களும் வெளியானதிற்கு அப்புறம் சூர்யா நடித்து கிடப்பில் இருக்கும் வாடிவாசல் படத்தை இயக்கி முடித்ததும் வட சென்னை 2 படத்தின் ஷூட்டிங்கை ஆரம்பிப்பேன் என்று கூறினார். இதை கேட்ட ரசிகர்கள் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போயுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here