13 ஆண்டுகள் கழித்து கமலோட இணையும் சூப்பர் ஸ்டார்.., ஆஹா அப்ப தரமான சம்பவம் இருக்கு மக்களே!!

0
13 ஆண்டுகள் கழித்து கமலோட இணையும் சூப்பர் ஸ்டார்.., ஆஹா அப்ப தரமான சம்பவம் இருக்கு மக்களே!!
13 ஆண்டுகள் கழித்து கமலோட இணையும் சூப்பர் ஸ்டார்.., ஆஹா அப்ப தரமான சம்பவம் இருக்கு மக்களே!!

நடிகர் கமல்ஹாசனுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் அடுத்த படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் உடலை வருத்தி ஒரு கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுப்பவர் தான் நடிகர் கமல்ஹாசன். தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புக்காக கமல்ஹாசன் தொகுத்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலக இருப்பதாக இணையத்தில் ஒரு செய்தி தீயாய் பரவி வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த செய்தி உண்மையா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள இந்த வார இறுதி வரை காத்திருக்க வேண்டும். இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை தயாரித்தும் வருகிறார். இந்நிலையில் இவரின் அடுத்த படம் குறித்து சோசியல் மீடியாவில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

காதலை அறிவித்த விஜய் டிவி நாயகி.,கல்யாணம் எப்போ தெரியுமா? மாப்பிள்ளை இந்த சினிமா ஹீரோ தான்!!

அதாவது இயக்குனர் லியோ ஜோஸ் இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் மலையாள படமான மலைக்கோட்டை வாலிபன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனை ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இவர் இருவரும் சேர்ந்து நடித்த உன்னை போல் ஒருவன் திரைப்படம் கடந்த 2009ம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து இவ் இருவரும் ஒன்றாக நடிக்க இருப்பதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here