இந்தியன் சூப்பர் லீக்: ஒடிசா அணியை வீழ்த்திய கேரளா…, கடைசி நேரத்தில் திரில் வெற்றி!!

0
இந்தியன் சூப்பர் லீக்: ஒடிசா அணியை வீழ்த்திய கேரளா..., கடைசி நேரத்தில் திரில் வெற்றி!!
இந்தியன் சூப்பர் லீக்: ஒடிசா அணியை வீழ்த்திய கேரளா..., கடைசி நேரத்தில் திரில் வெற்றி!!

இந்தியன் சூப்பர் லீக் தொடரில், ஒடிசா அணிக்கு எதிரான போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி கடைசி நேரத்தில் வெற்றி பெற்றது.

இந்தியன் சூப்பர் லீக்:

இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 9 வது சீசன் 11 அணிகளுக்கு இடையே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த லீக் தொடரில், கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை எதிர்த்து ஒடிசா அணி நேற்று கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் மோதியது. இதில், முதல் பாதியில் இரு அணிகளும் ஒரு கோலூக்காக கடுமையாக போராடினர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால், இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்காத நிலையில், முதல் பாதியானது கோலின்றி முடிந்தது. இதையடுத்து தொடங்கப்பட்ட 2வது பாதி ஆட்டத்தின் 86 வது நிமிடத்தில் கேரளா பிளாஸ்டர்ஸின் சந்தீப் சிங் கோல் ஒன்றை அடித்து அணியை முன்னிலை பெற செய்தார். இதே நிலையே கடைசி வரை தொடர்ந்ததால் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தியது.

எதிர்பாராத பவுலர் முதலிடம்…, அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர்களின் பட்டியல் இதோ!!

இந்த வெற்றி மூலம், கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 11 அணிகள் கொண்ட புள்ளிப் பட்டியலில் 22 புள்ளிகளுடன் 3வது இடத்தை பிடித்துள்ளது. இதில், ஒடிசா அணியானது, 19 புள்ளிகளுடன் 6 வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில், மும்பை சிட்டி அணியானது, தோல்வியை சந்திக்காமல் 27 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here