எதிர்பாராத பவுலர் முதலிடம்…, அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர்களின் பட்டியல் இதோ!!

0
எதிர்பாராத பவுலர் முதலிடம்..., அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர்களின் பட்டியல் இதோ!!
எதிர்பாராத பவுலர் முதலிடம்..., அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர்களின் பட்டியல் இதோ!!

மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும், நடப்பு ஆண்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரம் காட்டிய இந்திய வீரர்களுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது.

அதிக விக்கெட்டுகள்:

நடப்பு ஆண்டு முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில், ஒவ்வொரு நாளும், இந்த ஆண்டில் கிரிக்கெட்டில் நிகழ்ந்த பல்வேறு சாதனைகள் வெளியாகி வந்த வண்ணம் உள்ளன. இந்த வகையில், இந்திய வீரர்களில் மூன்று வடிவிலும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களுக்கான பட்டியல் ஒன்று வெளியாகி உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த பட்டியலில், நடப்பு ஆண்டில் அதிக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடிய யுஸ்வேந்திர சாஹல் முதலிடத்தில் உள்ளார். இவர், தனது சுழற் பந்து வீச்சால் 44 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி உள்ளார். இவரை தொடர்ந்து, ஆல்ரவுண்டரான அக்சர் படேல் 42, முகமது சிராஜ் 41 விக்கெட்டுகளையும் வீழ்த்தி 2 வது மற்றும் 3வது இடத்தில் உள்ளனர்.

அடுத்த இடங்களில் இந்தியாவின் டெத் ஓவர் ஸ்பெசலிஸ்டான பும்ரா (39) மற்றும் புவனேஸ்வர் குமார் (37) விக்கெட்டுகளுடன் டாப் 5 இடத்தை பிடித்துள்ளனர். இவர்களில், பும்ரா கடந்த சில மாதங்களாக காயம் காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார். ஆனாலும், இந்த வருடத்தின் ஆரம்ப மாதங்களில் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக இருந்து அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியதால், 4 வது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here