தனுஷின் சர்ச்சைகுரிய குடிபோதை வீடியோ – பதிலடி கொடுத்த ஜெயம்ரவி!!

0

நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் ஜெயம்ரவி இருவரும் நண்பர்களாக இருந்த காலகட்டத்தில், நடிகர் தனுஷ் குடிபோதையில் தகராறு செய்துள்ளவாறு வெளியான பழைய வீடியோ ஒன்று சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

சர்ச்சைக்குள்ளான வீடியோ

தமிழ் திரையுலகில் முக்கியமான நடிகர்களாக இருப்பவர்கள் நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் ஜெயம்ரவி. பொதுவாக சினிமா நடிகர்கள் நண்பர்களாக இருக்கும் போதும், அவர்களுக்குள் சினிமா சம்பந்தமான போட்டிகள் காணப்படுவது உண்டு. நடிகர்கள் யாரேனும் மற்றோருவருடன் பேசிக்கொள்ளாத பட்சத்தில், அவர்களுக்குள் சண்டை என்று மீடியாக்கள் கிளப்பி விடுவதும் உண்டு.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நடிகர்கள் தனுஷ், சிம்பு ஆகியோர் இப்படிப்பட்ட சர்ச்சைகளில் அடிக்கடி சிக்குவது உண்டு. இந்நிலையில் சினிமாவில் ஆரம்பகால கட்டங்களில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் ஜெயம்ரவி குடும்பத்தினருடன் ரெஸ்டாரண்ட் சென்றிருந்தபோது, குடிபோதையில் நடிகர் தனுஷ், நடிகர் ஜெயம்ரவியின் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – ஜூலை மாதம் முதல் அமல்!!

இந்த சம்பவம் நடந்து வருடங்கள் பல ஆன பின்பும், அந்த வீடியோக்கள் இணையத்தில் மீண்டுமாக வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவையெல்லாவற்றிற்கும் பதிலளிக்கும் விதமாக மகளிர் தினத்தையொட்டி நடிகர் ஜெயம்ரவி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவரது மனைவி குறித்த அழகான கருத்துக்களை பதிவு செய்துள்ளார் அவர்.

நடிகர் ஜெயம்ரவியின் சினிமா சாதனைக்கு பக்கபலமாக இருப்பவர் அவரது மனைவி ஆர்த்தி. பெண்கள் தினத்தை ஒட்டி அவர் வெளியிட்டுள்ள வீடியோ அவரது மனைவிக்கு எதிராக எழுந்த சர்ச்சை கருத்துகளுக்கெல்லாம் பதிலளிப்பதாக உள்ளது என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

‘போலீசார் என்னை பிரச்சாரம் செய்யாதீங்கனு கெஞ்சுனாங்க’ – உதயநிதி ஸ்டாலின் பேச்சு!!

நடிகர் ஜெயம்ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்கள் இருவருக்கும் ஆரவ் மற்றும் அயான் என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். திரையுலக பிரபலங்களில் மிக சிறந்த ஜோடியாக வலம் வரும் இவர்கள் ஜோடிக்கு சினிமாவை தாண்டியும் பல ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here