திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா – பெண்களை பற்றி உரையாற்றிய குடியரசு தலைவர்!!

0

நாட்டின் குடியரசு தலைவர் தற்போது தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இவர் தற்போது திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு ஊரையாற்றியுள்ளார்.

குடியரசு தலைவர்:

தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தற்போது திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார். அந்த விழாவில் கலந்துகொண்ட அவர் உரையாற்றியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, இந்த பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டது பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று பட்டங்கள் பெரும் அனைத்து மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். ஒவ்வரு முறையும் நான் தமிழகத்திற்கு வரும் பொழுதெல்லாம் இங்கு கடைபிடிக்கப்படும் இந்த பாரம்பரியம், இதில் எனக்கும் தொடர்பு இருப்பது போல் உணர்கிறேன்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் தான் புகழ் பெற்றவர்கள் அதிகம் உள்ளனர். சான்றாக, கணித மேதை ராமானுஜம், நோபல் பரிசு பெற்ற சி.வி.ராமன், சந்திரசேகர் போன்றவர்கள் என புகழ் பெற்றவர்களின் பட்டியல் நீடித்து கொண்டே போகும். எனக்கு முன்னாள் பதவி வகித்த ஆர்.வெங்கட்ராமன் மற்றும் அப்துல் காலம் ஆகிய இருவரும் இந்த மண்ணை சேர்ந்தவர்கள் தான். பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட 20 ஆண்டுகளில் நாட்டின் பெருமைமிகு பல்கலைக்கழகமாக திகழ்கிறது.

‘மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றும் இழிவுக்கு இனி முற்றுப்புள்ளி’ – உயர் நீதிமன்றம் அதிரடி!!

இந்த பல்கலைக்கழகத்தில் மொத்த மாணவர்களில் 65 சதவீதம் பெண்கள் தான் என்பதை அறிந்து நான் பெருமைப்படுகிறேன். பதக்கங்கள் மட்டும் பட்டங்களை பெறுவதற்கு மேடைக்கு வந்தவர்களில் 90 சதவீதம் பெண்கள் தான் என்பதை நான் கவனித்தேன். இந்தியாவில் கல்வி முறை விரிவானதை எண்ணி மனநிறைவு அடைகிறேன். பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பே இந்தியாவில் செழுமையான கல்வி முறை இருந்தது. இதனை காந்தியடிகள் குறிப்பிட்டார். நமது தாய்நாட்டை மாணவர்களாகிய நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

உங்களுக்கு கல்வியை வழங்கிய நிறுவனத்திற்கு மட்டுமல்லாமல் உங்கள் தாய் நாட்டுக்கும் நீங்கள் நன்றியை தெரிவிக்க வேண்டும். இந்தியாவின் கடமையுணர்வு கொண்ட குடிமக்களாக நீங்கள் திகழ்வீர்கள் என்று நம்புகிறேன். உலக அளவில் இந்தியாவை ஒளிரச்செய்வதில் நம் அனைவருக்கும் பங்கு உள்ளது. அன்பான முறையில் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வது எப்படி என்பதில் நமது நாடு சான்றாக உள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற குடும்பங்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எனது பாராட்டுக்கள். மேலும் அனைவரும் பிரகாசமான எதிர்காலத்தை அடைய வாழ்த்துகிறேன் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here