பெட்ரோல் டீசல் விலையை எதிர்த்து எதிர்க்கட்சிகள் அமளி – மார்ச் 15 வரை மாநிலங்களை ஒத்திவைப்பு!!

0

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருவதை கண்டித்து எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டனர்.

மாநிலங்களவை:

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அந்த தொடர் மிக சிறப்பாக முடிந்தது. தற்போது மத்திய பட்ஜெட்டின் இரண்டாவது கட்ட தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் கடந்த 8ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் நாட்டு மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இதனை கண்டித்து பல்வேறு தரப்பினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் வாகன ஓட்டிகளும் இதன் விலையை குறைக்குமாறு கோரிக்கை விடுத்தது வந்தனர். இருந்தும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்த பாடில்லை. தற்போது இதன் எதிரொலியாக மாநிலங்களைவியில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா – பெண்களை பற்றி உரையாடிய குடியரசு தலைவர்!!

இதனை கண்டித்து அவர்கள் தொடர்ந்து 3வது நாளாக மாநிலங்களவையில் அமளியில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் தற்போது மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநிலங்களவை வருகிற மார்ச் மாதம் 15ம் தேதி வரை மாநிலங்களை ஒத்திவைக்கப்படும் என்று சபை தலைவர் அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here