‘வாக்காளர் அடையாள அட்டை இல்லாமலும் வாக்களிக்கலாம்’ – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

0

தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வாக்காளர் அட்டை

தமிழக சட்டசபை தேர்தலில் வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தவகையில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 99 சதவீதம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தேர்தலில் வாக்களிக்க இந்த வாக்காளர் அட்டை கட்டயாமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள கீழ் கண்ட 11 ஆவணங்களில் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கீழே தவறி விழுந்த உயிருக்கு போராடும் தனம்?? உயிர் பிழைப்பாரா?? கதறும் மூர்த்தி!!

இதன்படி, பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ், பணியாளர் அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்கு புத்தகம், பான்கார்ட், தேசிய மக்கள் பதிவேடு அடையாள அட்டை, தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ் உள்ள அடையாள அட்டை, தொழிலாளர் நலத்துறையின் காப்பீடு அட்டை, புகைப்படத்துடன் உள்ள ஓய்வூதிய ஆவணம், அவை உறுப்பினர்களுக்குள்ள அலுவலர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றை கொண்டு வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here