ஷகிலாவின் மகளுடன் அஷ்வின் எடுத்துக்கொண்ட புகைப்படம் – இணையத்தில் வைரல்!!

0

நடிகை ஷகிலாவின் மகளுடன் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் புகழ் நடிகர் அஷ்வின் எடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

ஷகிலா மகள் மில்லா

முன்னொரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை ஷகிலா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடிகையாகவும், குணசித்திர நடிகையாகவும் நடித்துள்ளார். ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்த நடிகை ஷகிலா சில வருடங்களுக்கு முன்னாக சினிமாவை விட்டு விலகியிருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

குடும்பத்தில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனை காரணமாக அவர் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்ததாக ஷகிலாவின் நெருங்கிய வட்டாரங்கள் கூறி வந்தது. இந்நிலையில் நடிகை ஷகிலாவை மீண்டுமாக திரைக்குள் அழைத்து வந்த பெருமை விஜய் டிவியையே சாரும்.

திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா – பெண்களை பற்றி உரையாடிய குடியரசு தலைவர்!!

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரும் இவர் மீண்டுமாக தமிழ் மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவரும், ஷகிலாவை அம்மா என்று அழைக்கையில் உண்மையாகவே அவரது மனம் மகிழ்ச்சியடைவதை நம்மால் காண முடிகிறது.

தற்போது ஷகிலாவின் மகள் மில்லா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நடிகர் அஷ்வினுடன் புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை வலைதளத்தில் பதிவிட்டுள்ள மில்லா, அஷ்வினை அண்ணன் என கூறி பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தைக்கண்ட ரசிகர்கள் இவர் தான் ஷகிலாவின் மகளா என்ற ஆச்சரியத்துடன், புகைப்படத்தை வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here