ஆஹா.., அடுத்த கல்யாண ஜோடி ரெடி.., கெளதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன் திருமணம்.., ரசிகர்கள் கொண்டாடட்டம்!!

0
ஆஹா.., அடுத்த கல்யாண ஜோடி ரெடி.., கெளதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன் திருமணம்.., ரசிகர்கள் கொண்டாடட்டம்!!
ஆஹா.., அடுத்த கல்யாண ஜோடி ரெடி.., கெளதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன் திருமணம்.., ரசிகர்கள் கொண்டாடட்டம்!!

சமீபத்தில் நடிகர் கெளதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் காதலிப்பதை ரசிகர்களிடம் சொன்ன நிலையில், தற்போது திருமணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கெளதம் கார்த்திக்:

தமிழ் திரையுலகில் கடல், வை ராஜா வை, தேவராட்டம் போன்ற வெற்றி படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகர் கெளதம் கார்த்திக். தற்போது நடிகர் சிம்புவுடன் சேர்ந்து பத்து தல படத்தில் நடித்துள்ளார். பெரிய எதிர்பார்பில் இருக்கும் இந்த திரைப்படம் அடுத்த மாதம் டிசம்பர் 14ம் தேதி திரைக்கான இருக்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சமீபத்தில் “தேவராட்டம்” திரைப்படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த மஞ்சிமா மோகனை கௌதம் கார்த்திக் காதலிப்பதாக செய்தி வெளியானது. இதை உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் கெளதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகார்பூரமான அறிவிப்பை வெளியிட்டனர். இந்நிலையில் இவர்களது திருமணம் எப்போது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்தது. இதனையடுத்து இவர்களது திருமணம் விரைவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எங்க அண்ணா இப்படி பட்டவன் தான்.., அவன் ஒரிஜினல் முகத்தை காட்டவே இல்லை.., ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக்!!

அதாவது சென்னையில் வருகிற நவம்பர் மாதம்28ம் தேதி இவர்களது கல்யாணம் நடக்க இருக்கிறது. மேலும் இந்த திருமண விழாவிற்கு சொந்தக்காரர்கள் மட்டும் கலந்துகொள்ள உள்ளனர். அதன் பிறகு நடக்க இருக்கும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு தான் சினிமா வட்டாரங்களை அழைக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here