தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – அரசின் உதவித்தொகை திட்டம்! முழு விவரங்கள் உள்ளே!!

0
தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு - அரசின் உதவித்தொகை திட்டம்! முழு விவரங்கள் உள்ளே!!
தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு - அரசின் உதவித்தொகை திட்டம்! முழு விவரங்கள் உள்ளே!!

தமிழக பள்ளி மற்றும் உயர்கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவர்களுக்கான மத்திய அரசின், கல்வி உதவித்தொகை குறித்த முழு விவரங்கள் கீழே தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.

முழு விவரம் :

தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், 11ஆம் வகுப்பு முதல் உயர்கல்வி வரை பயிலும் மாணவர்களுக்கும் மத்திய அரசின் சார்பாக சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில், சிறுபான்மையின மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை குறித்து அறிவிப்பை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மத்திய அரசின் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் தேசிய கல்வி உதவித் தொகை காண விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க பள்ளி மாணவர்களுக்கு வரும் 15ஆம் தேதி வரையிலும், கல்லூரி மேற்படிப்பு பயில விரும்பும் மாணவர்களுக்கு வரும் 31 ஆம் தேதி வரையிலும் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.,, இனி கால் கடுக்க நிக்க வேணாம்.,புதிய வசதியை அறிமுகம் செய்த நிர்வாகம்!!

இது குறித்த கூடுதல் விவரங்களைப் பெற,  http://www.minorityaffairs.gov.in/schemes/ என்ற இணையதள முகவரியையும், மாவட்ட சிறுபான்மையின நல அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள், மேற்சொன்ன வரைமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here