T20WC.., தோல்வி அடைந்த இந்திய அணிகே இத்தனை கோடியா?? வெளியாகிய ஷாக் ரிப்போர்ட்!!

0
T20WC.., தோல்வி அடைந்த இந்திய அணிகே இத்தனை கோடியா?? வெளியாகிய ஷாக் ரிப்போர்ட்!!
T20WC.., தோல்வி அடைந்த இந்திய அணிகே இத்தனை கோடியா?? வெளியாகிய ஷாக் ரிப்போர்ட்!!

இந்திய அணி டி20 உலக கோப்பை தொடரில் அரையிறுதியில் தோல்வியை தழுவினாலும், பல கோடி பரிசு தொகை வென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

டி20 உலக கோப்பை பரிசு தொகை:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது (ஐசிசி) நடப்பு டி20 உலக கோப்பை தொடருக்கான பரிசு தொகையை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, உலக கோப்பையை வெல்லும் அணிக்கு 13 கோடி ரூபாயும், 2 வது இடம் பிடிக்கும் அணிக்கு 6.4 கோடி ரூபாயும் பரிசாக வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனை தொடர்ந்து, அரையிறுதி வரை முன்னேறி இறுதி போட்டிக்கு செல்ல தவறிய இரு அணிகளுக்கும் தலா 3.22 கோடி ரூபாய் பரிசு தொகை அளிக்கப்படும் எனவும் முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்தாலும், 3.22 கோடி ரூபாய் பரிசுத் தொகையுடன் நாடு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாகை சூடிய ஈஸ்ட் பெங்கால்.,சென்னைக்கு எதிராக மும்பை சிட்டி அணி…, சொந்த மண்ணில் பலப்பரீட்சை!!

மேலும், இந்த தொடரில் சூப்பர் 12 சுற்றின் ஒரு போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு 32 லட்சம் வழங்கபடுகிறது. இந்த வகையில், சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனால், இந்திய அணிக்கு 1.28 கோடி கூடுதலாக கிடைக்கும். எனவே, இந்திய அணி உலக கோப்பையுடன் நாடு திரும்பவிட்டாலும், தோராயமாக 4.5 கோடி பரிசுத் தொகையுடன் இந்தியாவை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here