வாகை சூடிய ஈஸ்ட் பெங்கால்.,சென்னைக்கு எதிராக மும்பை சிட்டி அணி…, சொந்த மண்ணில் பலப்பரீட்சை!!

0
வாகை சூடிய ஈஸ்ட் பெங்கால்.,சென்னைக்கு எதிராக மும்பை சிட்டி அணி..., சொந்த மண்ணில் பலப்பரீட்சை!!
வாகை சூடிய ஈஸ்ட் பெங்கால்.,சென்னைக்கு எதிராக மும்பை சிட்டி அணி..., சொந்த மண்ணில் பலப்பரீட்சை!!

இந்தியன் சூப்பர் லீக் தொடரில், எதிரணியை ஒரு கோல் கூட அடிக்கவிடாமல் ஈஸ்ட் பெங்கால் அணி வெற்றி பெற்று அசத்தியது. இன்று சென்னை அணிக்கு எதிராக மும்பை அணி மோத உள்ளது.

இந்தியன் சூப்பர் லீக்:

இந்தியன் சூப்பர் லீக் (ISL) தொடரில், ஈஸ்ட் பெங்கால் அணியை எதிர்த்து பெங்களூரு FC அணி நேற்று இரவு தனது சொந்த மண்ணில் மோதியது. இந்த ஆட்டத்தின் முதல் பாதி வரையில் இரு அணிகளும் ஒரு கோலுக்காக தங்களான முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். ஆனாலும், முதல் பாதியானது கோல் இல்லாமலே முடிந்தது.

தங்கப் பதக்கங்களை குவிக்கும் இந்திய வீராங்கனைகள்…, ஆசிய சாம்பியன்ஷிப்பில் தொடரும் அசத்தல்!!

இதையடுத்து, ஆட்டத்தின் 2வது பாதியில், ஈஸ்ட் பெங்கால் அணியின் கிளீடன் சில்வா 69 வது நிமிடத்தில் கோல் ஒன்றை அடித்து அசத்தினார். இதனால், ஈஸ்ட் பெங்கால் அணியானது முன்னிலை பெற்றது. இதன் பிறகு, ஈஸ்ட் பெங்கால், பெங்களூரு அணியை கோல் அடிக்க விடாமல் தடுத்து மட்டுமே வந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இறுதியில் ஈஸ்ட் பெங்கால் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால், ஈஸ்ட் பெங்கால் அணி நடப்பு ISL லீக்கில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 2ல் வெற்றி 4ல் தோல்வி அடைந்து 6 புள்ளிகளுடன் 8 வது இடத்தில் உள்ளது. இன்று சென்னை அணியானது, மும்பை சிட்டி அணிக்கு எதிராக ஜவஹர்லால் நேரு மைதானத்தில் போட்டியிட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here